துப்புரவு ஊழியர் அடித்து கொலை: பக்கத்து வீட்டுக்காரரின் பரபரப்பு வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 45) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

இவர்களது இளைய மகன் புதுச்சேரி காவல்துறையில் காவலர் பணிக்கு தேர்வாகி பயிற்சி பெற்ற வருகிறார். கோவிந்தம்மாள் ஜிப்மரில் ஒப்பந்த துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார். 

கடந்த மாதம் 10 ஆம் தேதி இரவு கோவிந்தம்மாள் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்த மர்ம வாலிபர் ஒருவர் கோவிந்தம்மாளின் பின்பக்க தலையில் இரும்புராடால் தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டார். 

இதில் பலத்த காயமடைந்த கோவிந்தம்மாள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த கொலை தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

கோவிந்தம்மாள் நடந்து வந்த மைதானம் மற்றும் அவரது வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 40 பேரிடம் விசாரணை நடத்தியதில் கோவிந்தம்மாள் வீட்டிற்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி (வயது 32) என்பவர் மாயமானது தெரியவந்தது. 

மேலும் இவருக்கும் கோவிந்தம்மாளுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும் அதனால் அவரை அடித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. 

இதனை அடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த பஞ்சமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்திய போது அவர் தெரிவித்திருப்பதாவது, 'எனது குடும்பமும் கோவிந்தம்மாள் குடும்பமும் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வருகிறோம். 

குப்பை கொட்டுவதில் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது கோவிந்தம்மாள் தரகுறைவான வார்த்தைகளால் எங்களை பேசுவார். 

சமீபத்தில் இதுபோல பிரச்சனை ஏற்பட்ட போது கோவிந்தம்மாள் எங்கள் குடும்பத்தை பற்றி கடுமையான சொற்களால் திட்டினார். 

எனக்கு திருமணம் ஆகி 6 மாதம் ஆன நிலையில் எனது மனைவி கர்ப்பமாக உள்ளார். எனக்கு வாரிசு உருவாக்காது அது அழிந்துவிடும் என்றெல்லாம் அவர் பேசினார். 

இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டு அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக அவர் வரும் வழியில் காத்திருந்து அவரை கொலை செய்தேன்' என பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry Cleaning worker death Neighbor arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->