பிரதமருக்கு புதுச்சேரி முதலமைச்சர் பரபரப்பு கடிதம்: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, முதலமைச்சர் ரங்கசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, 

புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் எதிர்பாராத வகையில் சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். 

அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படும் போது மத்திய வெளியுறவுத்துறை தலையீட்டின் மூலம் மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்கிறது. 

ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விடுவிக்கப்படவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் காரைக்கால் மீனவர்களது 11 படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

மோட்டார் பொருத்தப்பட்ட இந்த படகுகள் தலா 1 கோடி மதிப்பிலானவை, இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

எனவே காரைக்கால் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் விதமாக இலங்கை அரசிடம் இருந்து படகுகளை மீட்டு தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry cm letter to PM Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->