இனி "CBSE" பாடத்திட்டம் மட்டும் தான்.. வெளியான அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கான தனி கல்வி வாரியம் இல்லாததால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றி வந்தது.

இதன் காரணமாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கு தமிழக அரசின் தேர்வு வாரியத்தின் கீழ் நடத்தப்படும் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அங்கீகரித்தது. 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தியது.

இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் தேர்வு நடத்தப்படும் என புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இருந்து விலகி மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை முழுமையாக பின்பற்றப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry govt implemented cbse board


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->