வேலைக்கு போகாததை கண்டித்த தாய்: வாலிபர் விபரீத முடிவு! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியைச் சேர்ந்தவர் செயின்ட்டு அந்துவான். இவரது மனைவி மரிகிளேர். இவர் அரவிந்தர் ஆசிரமம் நூலகத்தில் பணியாற்றி வருகிறார். 

இவர்களது மகன் அதல்பர் (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள அவரது அத்தை வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில் அடிக்கடி அதல்பர் தனது தாயை சந்தித்து நலன் விசாரித்து வருவார். 

அதுபோல் தனது தாயை சந்திக்க அதல்பர் வந்தபோது மரிகிளேர், வேலைக்கு எதுவும் செல்லாமல் இருக்கிறாயே என கண்டித்ததாக தெரிகிறது. 

இதனால் மனமுடைந்த அதல்பர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலி மருந்தை தின்றுள்ளார். இதில் உடல் பாதிப்படைந்த அதல்பரை உறவினர்கள் மீது புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதல்பர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண்டித்ததால் மனவேதனை அடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry teenager commits suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->