மக்களே கவனம் - தாய், மகள் உள்ளிட்ட 3 பேரை பலிகொண்ட கழிவறை - இதுவரை நடக்காத கொடூர சம்பவம்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கழிவறைக்கு சென்ற மூதாட்டி ஒருவர் விஷவாயு தாக்கி பலியாகி உள்ளார். அவரை காப்பாற்ற சென்ற இருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி என்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மூதாட்டியின் பெயர் செந்தாமரை, வயது 72 என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் மூதாட்டி செந்தாமரையை காப்பாற்ற சென்ற அவரின் மகள் காமாட்சியும் உயிரிழந்து உள்ளார். 

முதல் கட்ட விசாரணையில் கழிவுநீர் தொட்டிகளில் இருந்து கழிவறைக்குள் விஷ வாயு பரவியதால் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர் எனபது தெரியவந்துள்ளது.

இந்த விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்த அந்த பகுதி மக்கள் தெரிவிக்கையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தங்கள் பகுதியில் உள்ள அனைவரையும் வீட்டில் இருந்து வெளியே வர அறிவுரை செய்தனர். 

பாதாள சாக்கடை நிரம்பி வழிவது குறித்து ஏற்கனவே தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, பாதாள சாக்கடை வழியாகத்தான் இந்த விஷ வாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்து உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுவரை இது போன்ற ஒரு சம்பவம் நடந்து யாரும் கேள்விப்பட்டதில்லை. கழிவு நீர் வாய்க்கால் மற்றும் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இறந்த சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்துள்ள நிலையில், கழிவறையில் விஷ வாய்வு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த நிகழ்வு இதுவரை நடந்திடாத ஒரு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக வீட்டில் உள்ளே கழிவறை வைப்பதற்கு பதிலாக, வீட்டை விட்டு வெளியே கழிவறை அமைப்பது தான் உகந்தது. மேலும் கழிவறையை சுத்த பத்தமாக வைத்திருப்பதுடன், கழிவறை கதவுகளை மட்டும் திறந்து வைப்பதுடன், காற்றோட்டமான ஜன்னலையும் அமைப்பது அத்தியாவசியம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry Toilet gas leak 3 lady death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->