இனி ஆபிஸ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தான்.! அரசின் திட்டம் அறிவிப்பு.!
Punjab govt Office timing Changed
நாட்டில் கோடை காலம் என்ற காரணத்தால் மின்சார தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் மின்சாரத் தேவைகளை குறைக்கின்ற விதமாக பஞ்சாப் மாநில அரசு அதிரடியான திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கி வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தில், மின்சாரத்தை சேமிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றியமைப்பதற்கு பஞ்சாப் அரசு முடிவு செய்து உள்ளது.
அந்த வகையில், மே 2-ந்தேதியான இன்று முதல் வரும் ஜூலை 15-ந்தேதி வரை மாநிலம் முழுவதும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அரசு அலுவலகங்கள் திறந்திருக்கும். இந்த முடிவின் மூலம் 300 முதல் 350 மெகாவாட் வரையிலான மின்சாரம் சேமிக்கப்படும்.
இதன் மூலம் பொதுமக்களும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்னரே அரசு அலுவலகங்களில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
English Summary
Punjab govt Office timing Changed