பஞ்சாப் | ஓரின ஜோடியின் காதல்! திருமணம் நடத்தி வைத்ததால் மதகுருவுக்கு நேர்ந்த சோகம்! - Seithipunal
Seithipunal


பஞ்சாப், பதிந்தா நகரை சேர்ந்தவர் மனிஷா (வயது 21) அதே பகுதியைச் சேர்ந்தவர் டிம்பிள் (வயது 27) இருவரும் இணை பிரியாத தோழிகள். 

சட்டிஸ்கர் அருகே உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை பார்த்த போது தன்பாலின ஈர்ப்பால் இருவரும் காதலித்தனர். 

மேலும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெற்றோர் மூலமாக உள்ளூர் சீக்கிய குருவாராவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த திருமணத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என சுமார் 70 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு சீக்கிய மத குரு ஹர்தேவ் திருமணம் நடத்தி வைத்தார். 

இந்த திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சீக்கிய மதகுருகளின் தலைவரான ரக்பீர் சிங் தன்பால் 'இந்த திருமணம் இயற்கைக்கு மாறானது. சீக்கிய கோட்பாடுகளுக்கு எதிரானது' என தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து திருமணம் நடத்தி வைத்த மதகுரு உள்பட 4 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab two girls get married


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->