தமிழகத்தில் பல கோடிக்கு விற்கப்படும் துணை வேந்தர் பதவிகள்.! உண்மையை போட்டு உடைத்த ஆளுநர்! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தின் கவர்னர் பன்வாரி லால் புரோஹித், அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகள் கவர்னராக இருந்ததை குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் நிலை மிகவும் மோசம். அங்கு பல்கலைகழக துணைவேந்தர் பதவி ரூ. 40 முதல் 50 கோடிக்கு விற்கப்பட்டு வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், “ தமிழகத்தில் நான் கவர்னராக இருந்த போது 27 பல்கலைகழக துணை வேந்தர்களை சட்டப்படி நியமித்தேன். இதை என்னிடம் இருந்து பஞ்சாப் அரசு கற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாபில் யார் தகுதியானவர்கள் யார் தகுதியற்றவர்கள் என்றெல்லாம்  எனக்கு தெரியாது. கல்வி தரம் உயர் வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இவர் தமிழ்நாட்டில் கவர்னராக பதவி வகித்தபோது, மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட விவகாரம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.  அரசு விவகாரங்களில் கவர்னர் தலையிடக்கூடாது என்று அப்போதைய எதிர்கட்சியாக இருந்த திமுக கருப்புக்கொடி காட்டியது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

punjap governer banvari lal prohit speech in govt function


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->