ஆபாச வீடியோக்களை விற்பனை செய்யும் தளமாக மாறும் ட்விட்டர்..!
punjap sandikar university vedio case
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியில் சண்டிகார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர். இதில் மொத்தம் 60 மாணவிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதாக வதந்தி பரவியது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த மாணவிகள் கடந்த 17-ந்தேதி பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அதிகாரிகள் பல்கலைக்கழகத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில், அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி, தனது ஆபாச வீடியோவை இமாசலபிரதேச மாநிலத்தின் தலைநகரான சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மாணவியும், இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள வாலிபர் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்காக நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் பிரபல சமூக வலைதளமான டுவிட்டர், தற்போது ஆபாச வீடியோக்களை விற்பனை செய்யும் தளமாக மாறி வருகிறது என்று சிலர் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:- "20 - 30 ரூபாய்க்கு மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்யும் தளமாக டுவிட்டர் மாறி வருகிறது. சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் வீடியோக்கள் டுவிட்டரில் அதிகம் பகிரப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
punjap sandikar university vedio case