புதுச்சேரி || 25 பொருட்கள்.. 800 ரூபாய்.. தொடங்கி வைத்த முதலமைச்சர் ..!   - Seithipunal
Seithipunal


அடுத்த வாரம் திங்கள் கிழமை வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, திருக்கனூர் மற்றும் காரைக்காலில் சிறப்பு அங்காடி நடத்தப்பட உள்ளது. அதில் முதல் கட்டமாக புதுச்சேரி, தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு அங்காடியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

சமீபகாலத்தில் பாப்ஸ்கோ சிறப்பங்காடியில் மளிகை பொருட்களை ஒவ்வொரு பிரிவாக சென்று வாங்க வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற வீண் அலைச்சலும், கூட்ட நெரிசலும் தான் ஏற்பட்டது.

அதனை தவிர்க்கும் வகையில் இந்தாண்டு எண்ணெய் உள்ளிட்ட 25 வகை மளிகைப் பொருட்களை ஒரே தொகுப்பாக அதுவும் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 83 ஆயிரம் மாளிகைத் தொகுப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை சிறப்பங்காடிக்காக தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இரண்டு ராட்சத அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, 25 மளிகை பொருட்களை ஒரே தொகுப்பாக வழங்க உள்ளதால், அதனை ஒழுங்குமுறை விற்பனை கூட குடோன்களில் வைத்து வழங்க புதுச்சேரி முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்த தீபாவளி சிறப்பு அங்காடியின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் சாய்.சரவணகுமார் உள்ளிட்டோர் பாப்ஸ்கோ தீபாவளி பண்டிகை சிறப்பு அங்காடியைத் திறந்து வைத்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்ததாவது, " 25 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு 800 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே போன்று பட்டாசு மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த ஆண்டு கூட்டுறவுத்துறை கான்பெட் மூலமாகவும் சில இடங்களில் குறைந்த விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது.

அதேபோல், இந்த ஆண்டு 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு உரிய பணத்தை அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மக்கள் குறைகளை கேட்டு அதை தீர்க்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம் அதன்படி மக்கள் குறைகள் தீர்க்கப்பட்டு வருகிறது"  என்று மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthchery deepavali special shop


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->