கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம் - மகனின் கல்லறையில் க்யூஆர் கோடு பதிவு.!
qr code on son grave for revieve son memories in kerala
நமது அண்டை மாநிலமான கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இளம் மருத்துவர் ஐவின் பிரான்சிஸ். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பேட்மின்டன் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.
ஐவின் பிரான்சிஸ் படிப்பில் மட்டுமில்லாமல், விளையாட்டு, இசை என்று அனைத்திலும் திகழ்ந்தவராக வலம் வந்துள்ளார். இதற்கிடையே தங்கள் மகனின் பிரிவால் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மிகவும் கவலையில் இருந்து வந்த நிலையில், மறைந்த தனது மகனின் திறமைகளை உலகறிய செய்ய அவரது பெற்றோர்கள் விரும்பினர்.
இதனால், ஐவின் பிரான்சின் அக்கா தனது தம்பி குறித்த தகவல்கள் அனைத்தையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அவரின் கல்லறையில் 'க்யூஆர் கோடு' பதிப்பதற்கு யோசனை தெரிவித்துள்ளார். அதன்படி, தங்கள் மகனின் கல்லறையில் 'க்யூஆர் கோடு' பதித்துள்ளனர்.
இந்த க்யூஆர் கோடு மூலம் ஐவின் பிரான்சிஸ் நினைவூகளுக்கு அவரது பெற்றோர் உயிரூட்டி உள்ளனர். இறந்த மகனின் நினைவுகளுக்கு உயிரூட்டும் விதமாக மகனின் கல்லறையில், க்யூஆர் கோடு வைத்த சம்பவம் கேரளாவில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
qr code on son grave for revieve son memories in kerala