அவதூறு வழக்கு: ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், கோலாரில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ராகுல் காந்திக்கு எதிராகக் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தின் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து அவதூறு வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக அங்குள்ள அமா்வு நீதிமன்றத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நீக்க கோரி ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தாா். 

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இந்த உத்தரவுக்கு எதிராக ராகுல் காந்தி குஜராத் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi appeal in the defamation case will be heard today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->