நீதியே வெல்லும்! முதல்வர் ஸ்டாலின் பதிவு! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றத்தின் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி 2 சூரத் நீதிமன்றம் ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. 

இதனால் ராகுல் காந்தி மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கில் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இன்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கினறனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டிருப்பதாவது, ''நீதி வெல்லும்! ராகுல் காந்தி வயநாடு தொகுதியை தக்கவைக்கிறார். 

அன்பு சகோதரர் ராகுல் காந்தியின் அவதூறு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சிறப்பாக வரவேற்கிறோம்.

இந்த முடிவு நீதித்துறையின் வலிமை, ஜனநாயகத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது'' என பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi defamation case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->