ராகுல் காந்தியுடன் ஹெலிகாப்டரில் பறந்த மாணவிகள்.. என்ன காரணம் தெரியுமா.?!
Rahul Ganthi Complete 3 school girls Wish
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி பகுதியில் ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொண்ட போது 11ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகள் 3 பேர் அவருடன் நடை பயணம் மேற்கொண்ட போது அந்த மூன்று மாணவிகளும் ஹெலிகாப்டரில் பறக்க ஆசை இருப்பதாக தெரிவித்தனர்.
அவர்களின் ஆசையை தான் நிறைவேற்றுவதாக ராகுல் காந்தி வாக்களித்தார். அதன்படி கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி உஜ்ஜைணி பகுதியைச் சேர்ந்த அந்த மூன்று மாணவிகளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு ஹெலிகாப்டரில் பறந்தார்.
ஹெலிகாப்டர் பயணத்தின் போது அதன் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகளுக்கு ராகுல் காந்தி விளக்கம் கொடுத்தார். சுமார் 20 நிமிடங்கள் இந்த ஹெலிகாப்டர் பயணம் நீண்டது. அதன் பின், மாணவிகள் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி சென்றனர்.
இது குறித்து அந்த மாணவிகள் பேசிய போது, "ஹெலிகாப்டரில் அதுவும் ராகுல் காந்தியுடன் பயணித்தது எங்களுக்கு மிகப்பெரிய கௌரவம். நீண்ட நாள் ஆசை நிறைவேறி இருக்கிறது. எங்களிடம் பேசிய போது ராகுல் காந்தி சமுதாயம் குடும்பம் உள்ளிட்டவற்றை பார்க்காமல் உங்களுக்கு எது விருப்பமோ அந்தத் துறையில் படியுங்கள் என்று அறிவுரை கூறினார்." என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
Rahul Ganthi Complete 3 school girls Wish