நம் நாட்டு பென்கள் கணவனுக்காக பூஜை செய்கிறார்கள் - ராஜஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு..! - Seithipunal
Seithipunal


நம் நாட்டு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர்  மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரின் அமைச்சரவையில் பேரிடர் துறை அமைச்சராக இருப்பவர் கோவிந்த் ராம் மெஹ்வால். இவர் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தெரிவித்ததாவது,  நம் மக்கள் மூடநம்பிக்கையில் உள்ளனர்.மதம், ஜாதி பெயரில் மோதலை ஏற்படுத்தி வருகின்றனர். கர்வா சவுத் பண்டிகையின்போது, நம் பெண்கள் விரதம் இருந்து, சல்லடை வாயிலாக கணவனை பார்த்து கணவனின் நீண்ட ஆயுளுக்காக பிராத்தனை செய்து வருகின்றனர். ஆனால்,அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில், உள்ள பெண்கள் அறிவியலில் சிறந்து விளங்குகின்றனர் என பேசியுள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, அமைச்சர் நம் நாட்டு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும் அதனால், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவரது பதவியை பறிக்க வேண்டும் எனவும்  பலர் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajastan Minister Statement triggers People


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->