4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சப்-இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த போக்சோ! கொந்தளிக்கும் மக்கள்! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான், ராகுவாஸ் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் பூபேந்திர சிங். இவர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது காவல் நிலையத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் காவலர் ஒருவரின் மகளான 4 வயது சிறுமி அங்கு விளையாட சென்றுள்ளார். 

அப்போது அந்த சிறுமையை பூபேந்திர சிங் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

பின்னர் சிறுமி இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் காவல் நிலையத்திற்கு முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். 

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் பூபேந்திர சிங்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு பூபேந்திர சிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

இதற்கிடையே பாரதிய ஜனதா எம்.பி. சம்பவ இடத்திற்கு சென்று, தலித் சிறுமியை சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சம்பவ இடத்திற்கு வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், குற்றம் சாட்டப்பட்ட காவலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு எல்லாவிதத்திலும் உதவி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajasthan 4 year old girl molested case sub inspector arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->