ராஜஸ்தான் முன்னாள் எம்.எல்.ஏ. மீது பெண் 'பரபரப்பு புகார்': மாநில காங்கிரஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான், பாரமரைச் சேர்ந்த மேவாராம் ஜெயின் உள்பட 9 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் புகார் அளித்தார். 

அதில், மேவாராம் ஜெயின் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மானபங்கம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 

அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ மேவாராம் ஜெயின் மீது இதற்கு முன்னதாக 2 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவரது வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.  

இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏவான மேவாராம் ஜெயின் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இன்று காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என மாநில காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan congress leader suspended


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->