7 மகள், 5 மகளை கொலை செய்த தாய்., 2 மகள் தப்பியது எப்படி? கொலைக்கு இதான் காரணமா?! - Seithipunal
Seithipunal


கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஐந்து மகள்களை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், கணவன் மற்றும் அவரின் குடும்பத்தினர் தொடர்ந்து சண்டை, தகராறு செய்த காரணத்தினால், தாய் தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளதாக போலீசார் தரப்பில் முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், சேச்சாட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஞ்சரோன் கா டேரா கிராமத்தை சேர்ந்தவர் சிவ்லால் பஞ்சாரா. இவர் போர்வை, துணிகள் விற்று வரும் தொழில் செய்து வருகிறார். சிவ்லால் பஞ்சாராவின் மனைவி பதாம்தேவியும்,  மகள்கள் சாவித்திரி (வயது 14), அங்கலி (வயது 8), காஜல் (வயது 6), குஞ்சன் (வயது 4) மற்றும் ஒரு வயதேயான அர்ச்சனா ஆகிய ஐந்து மகள்களுடன் அதே கிராமத்தில் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

சம்பவம் நடந்த அன்று பதாம்தேவி தனது ஐந்து மகள்களுடன் அதே கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் கிணற்றில் சடலங்களை கண்ட கிராமத்து மக்கள் போலீசாருக்கும் அவரது கணவருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 6 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொண்ட பிறகு சடலங்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வட்டார அலுவலர் தரப்பில், "கணவன் -மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தற்கொலை நடந்திருக்கும்" என்று தெரிவித்துள்ளனர்.

இந்த தற்கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டறியும் விதத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அவர்களது காயத்ரி (வயது 15), புனம் (வயது 7) என்ற இரு மகள்களும் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்கள் உயிர் தப்பியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RAJASTHAN MOTHER AND 5 DAUGHTER COMMIT SUICIDE


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->