ராஜஸ்தான் || கடனை செலுத்த முடியாமல் மகள்கள் விற்பனை.! தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்..! - Seithipunal
Seithipunal


நேற்று ராஜஸ்தான் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளதாவது, "ராஜஸ்தான் மாநிலத்தில் பல மாவட்டங்களில் பெண் குழந்தைகளை ஏலம் விடும் சம்பவங்கள் நிகழ்வதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  ஊடகங்களின் கருத்துப்படி, பில்வாரா மாவட்டத்தில் மக்களுக்குள் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை அப்பகுதியில் உள்ள சமுதாய அமைப்புகள் முன்வந்து, பிரச்சனையை காவல்துறைக்குச் செல்லாமல் தங்களுக்குள்ளாகவே தீர்த்துக் கொள்வது வழக்கம்.

ஆனால், அதே சமுதாய அமைப்புகள், ஒரு குடும்பத்தில் யாரேனும் கடன் வாங்கி அதனைத் திருப்பி கொடுக்க முடியாவிட்டால் அந்தக் குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகளை விற்பனை செய்ய வற்புறுத்துவதும் அவ்வாறு இல்லையென்றால் குழந்தைகளின் தாய் வன்கொடுமை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்களின் கருத்துப்படி, அங்குள்ள சமுதாய அமைப்பு, ஒரு நபர் பெற்ற 15 லட்சம் கடனுக்காக அவரது தங்கை மற்றும் அவரின் 12 வயது மகளையும் வற்புறுத்தி விற்பனை செய்ய வைத்துள்ளது.

இதேபோன்று 6 லட்சம் கடனுக்காக ஒரு பெண் குழந்தையும் விற்பனை செய்யப்பட்டுள்ளார். அவரை ஆக்ராவிற்கு கொண்டு சென்று மீண்டும் வேறு வேறு நபர்களிடம் மாறி மாறி விற்பனை செய்யப்பட்டதும் அவர் நான்கு முறை கர்ப்பமானது தெரியவந்தது. 

 இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை ஒன்றை ராஜஸ்தான் மாநிலத் தலைமைச் செயலருக்கு அனுப்பி நான்கு வாரங்களுக்குள் இத்தகைய கொடூரமான சம்பவங்கள் தடுக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajasthan National Human Rights Commission notice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->