மார்ச் 8 | அனைத்து விதமான அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமாக பயணம் - ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வரும் மார்ச் 8 ஆம் தேதி ராஜஸ்தானில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அரசுப் பேருந்களில் இலவசமாக பயணம் செய்யலாம் அருவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வரும் மார்ச் 8 ஆம் தேதி அணைத்து விதமான அரசு பேருந்துகளிலும் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று, அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

சுமார் 8.50 லட்சம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சர்வதேச மகளிர் தினத்தன்று அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

சாதாரண மற்றும் விரைவு உள்பட அனைத்து  அரசுப் பேருந்துகளில் இந்த இலவச பயணம் திட்டத்திற்காக ரூ.7.50 கோடி நிதிச்சுமை ஏற்படும் என மாநில அரசு மதிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், சாதாரண  அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகையை 30 சதவிகிதத்திலிருந்து, 50 சதவிகிதமாக உயர்த்தும் திட்டத்திற்கும் முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த சலுகை அமல்படுத்தப்படும் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan Womens Free bus Travel 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->