ரூ. 2 ஆயிரம் கோடியில் பரந்தூர் விமான நிலையம் - மத்திய அரசு தகவல்.! - Seithipunal
Seithipunal


நேற்று மாநிலங்களவையில், விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்ட விவரங்கள் தொடர்பாக தி.மு.க. எம்.பி. கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. அனில் பிரசாத் ஹெக்டே மற்றும் கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. இளமாரம் கரீம் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியிருந்தனர். 

அந்த கேள்விக்கு சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது,

"கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,349 கோடிக்கு குத்தகை அடிப்படையில் ஆறு விமான நிலையங்கள் பொது மற்றும் தனியார் கூட்டாண்மை முறையில் ஏலம் விடப்பட்டதாக" தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சென்னை விமான நிலையம் விரிவாக்கப்பணிகள் மற்றும் புதிய விமான நிலையம் குறித்து கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்ததாவது, "சென்னையில் தற்போதுள்ள விமான நிலையத்திற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு விமான நிலைய ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் படி, புதிய முனையம் ரூ.2,467 கோடிக்கு அமைகிறது. 

இந்த புதிய விமான நிலையத்தைப் பொறுத்தவரை விமான ஆணையம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இரண்டாவது விமான நிலையத்திற்கு சென்னை அருகில் உள்ள பரந்தூரை மாநில அரசு தேர்வு செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajya shaba meeting transport minister v k singh speach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->