ராமர் கோவில் கும்பாபிஷேக விழா- அதிரடி உத்தரவு பிறப்பித்த ராஜஸ்தான் அரசு!  - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. 

இதனை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தின் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிதி துறை இணைச் செயலாளர் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். 

ஜெய்ப்பூர் முனிசிபால் கார்ப்பரேஷன் மேயர் கடந்த வாரம் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் 22 ஆம் தேதி அன்று நகரத்தில் பாரம்பரிய பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் மூட உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்திலும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ram temple kumbhabhishekam liquor ban Rajasthan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->