ராமர் கோவில் கும்பாபிஷேகம் - பிரேத பரிசோதனை செய்யும் பெண்ணை கண்ணீர் விட வைத்த அழைப்பிதழ்.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு ஜனவரி 22 ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு நாடு முழுவதிலும் ஏராளமானவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனால், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பிரேத பரிசோதனை செய்யும் பெண் ஒருவர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷி துர்கா. சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் இவர் சுமார் 700 சடலங்களுக்கு மேல் பிரேத பரிசோதனை செய்துள்ளார். 

இவரது சேவையை பாராட்டி கௌரவிக்கும் விதமாக ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- "அயோத்தி நகருக்கு நான் அழைக்கப்படுவேன் என்று என் கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கே எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அழைப்பிதழை பார்த்ததும் எனது கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தன” என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramar temple invitation send to chateesgarh postmodern woman


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->