ஜனவரியில் ராமர் கோயில் திறப்பு.. அனைத்து மாநில மொழிகளில் அழைப்பிதழ்.! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் ராமர் கோயில் கட்டுப் பணியை ஸ்ரீராம ஜென்ம தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராமர் கோயில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி மாதம் முதல் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சித்ரா அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த தேவசரி மகாராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.

அந்த வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என யோகி ஆதித்யநாத் விரும்புவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் அந்தந்த மாநில மொழிகளில் ராமர் கோயில் அழைப்பிதழ் அச்சிடப்படும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramar temple open invitation in all State language


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->