உலக சாதனை படைத்த பிரபல பிலிம் சிட்டியின் உரிமையாளர் காலமானார்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் அப்துல்லாபூர்மெட்டில் ஒருங்கிணைந்த திரைப்பட ஸ்டுடியோவான ராமோஜி பிலிம் சிட்டி அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோ என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ள இந்த ஸ்டுடியோ 1,666 ஏக்கர் பரப்பளவில் ராமோஜி ராவ் என்பவரால் 1991 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 

ஹைதராபாத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒறான ராமோஜி ஃபிலிம் சிட்டி பாகுபலி, பொன்னியின் செல்வன், புஷ்பா, வலிமை, லியோ உள்ளிட்ட பிரபல திரைப்படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 20 பட யூனிட்களை ஆதரிக்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக உள்ள இந்த பிலிம் சிட்டியில் ஹாலிவுட் சிக்னேஜ், ஜப்பானிய கார்டன்ஸ், லண்டன் ஸ்ட்ரீட், விமான நிலையம், மருத்துவமனை, இயற்கைக்காட்சிகள் மற்றும் ஆய்வகங்கள் உள்ளிட்ட பல படப்பிடிப்பு இடங்கள் உள்ளன.

இவ்வளவு பெரிய பிரமாண்டமான பிலிம் சிட்டியை உருவாக்கிய ராமோஜி ராவ் உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramoji flim city leader ramoji rav passed away


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->