ரயில் நிலையங்கள் தரவரிசை வெளியீடு!...சென்னை சென்ட்ரல் எத்தனையாவது இடம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்திய ரயில்வே வாரியத்தால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் ரயில் நிலையங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 3வது இடத்தில் உள்ளது.

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய ரயில்வே வாரியம் வெளியிட்டு வருகிறது.இந்த பட்டியல் வருவாய் மற்றும் பயணிகளின் வருகை அடிப்படையில் வெளியிடப்படும் நிலையில், முன்னதாக 2017-2018ம் ஆண்டு நிதியாண்டில் இவை வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த நிதியாண்டில் 2023-2024 ரயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை இந்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. 

இந்த பட்டியலில், கடந்த நிதியாண்டில் 3.93 கோடி பயணிகளை கையாண்டு 3,337 கோடி வருவாய் ஈட்டி புதுடெல்லி ரயில் நிலையம்  முதல் இடத்தில் உள்ளது.  ரூ.1,692 கோடி வருவாய் ஈட்டியுள்ள கொல்கத்தா ஹௌரா ரயில் நிலையம் 2ம் இடத்திலும், ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி சென்னை சென்ட்ரல் 3ம் இடத்திலும் உள்ளது.  மேலும், சென்னை எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்கள் தெற்கு ரயில்வேயில் முதல் பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranking of railway stations published Do you know how many seats Chennai Central Station has


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->