கடுமையான குளிர் | டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட்! - Seithipunal
Seithipunal


டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு குளிர் அலை மற்றும் மோசமான மூடு பனி காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்ததுள்ளது.

இந்தியாவில் ஹிமாச்சல் பிரதேசம், தலைநகர் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், பீகார் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் அலை வீசி வருகிறது.

சில மாநிலங்களின் பகுதிகளில் குறைந்தபட்சமாக 2 டிகிரி செல்சியஸ் வரை குளிரானது பதிவாகியுள்ளது. 

கடுமையான குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடுமையான குளிர் காரணமாக ஒரே நாளில் 25 பேர் பலியாகி சோக சம்பவமும் அரங்கேறி உள்ளது.

குளிர் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மாநிலங்களுக்கு, குளிர் அலை மற்றும் மோசமான மூடு பனி காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்ததுள்ளது.

மேலும், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்ததுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Red Alert for cold wave


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->