கேரளாவில் கனமழை எதிரொலி! இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!
Red Alert for Kerala Heavy Rain fall
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் தொடர்ந்து கனமழை பொழிந்து வருவதால் கேரளாவின் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் உருவாகியுள்ளதால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்னும் இரண்டு நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் பலத்த காற்றுடன் கனமழை பொழிய உள்ளது.
அத்துடன் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசவுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையடுத்து கேரளாவின் எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பாலக்காடு, கோட்டயம், இடுக்கி, வயநாடு, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கண்ணூர், காசர்கோடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
English Summary
Red Alert for Kerala Heavy Rain fall