வெளுத்து வாங்கும் மழை - மும்பைக்கு ரெட் அலர்ட்..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, புனே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் மக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.

தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கியதால் சில ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன் தொடர் மழையால் முத்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தத் தொடர் மழை காரணமாக தானே, பால்கர் மற்றும் ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், புனேவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று கனமழை பெய்யும் என்றும், குறிப்பாக மும்பை நகருக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

red alert to mumbai


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->