மதங்களும், மொழிகளும் நம்மை ஒன்றிணைத்துள்ளன - குடியரசு தலைவர் திரவுபதி முர்மு!
Republic Day 2023 President Droupadi Murmu
மதங்களும், மொழிகளும் நம்மை ஒன்றிணைத்துள்ளன என்று, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனது குடியரசு தின உரையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, இன்று நாட்டு மக்களுக்கு காணொளி மூலம் உரையாற்றினார்.
அவரின் உரையில், "நாட்டு மக்களுக்கு எனது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய குடியரசு தினத்தை நாம் கொண்டாடும்போது, ஒரு தேசமாக நாம் எதை அடைந்தோமோ, அதை கொண்டாடுகிறோம்.
'நாம் அனைவரும் இந்தியர்கள்' என்ற ஒற்றுமை எண்ணத்துடன் ஜனநாயக குடியரசாக நாம் வெற்றியடைந்து இருக்கிறோம்.
நாட்டின் பல்வேறு விதமான மதங்களும், மொழிகளும் நம்மை பிளவுபடுத்தவில்லை, மாறாக அவை நம்மை ஒன்றிணைத்துள்ளது.
இந்திய நாகரிகம் உலகின் மிகச்சிறந்த நாகரிகங்களில் ஒன்று. நம் இந்தியாவிற்கு அம்பேத்கர் உள்ளிட்ட பல ஆளுமைகள் அடித்தளத்தை அமைத்து கொடுத்து உள்ளனர்.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் நம் இந்தியா ஒன்றாக இருக்கிறது. நம் அரசாங்கத்தின் செயல் திட்டங்களால் இது சாத்தியமாகியுள்ளது.
பெண்களுக்கு அதிகாரம், பாலின சமத்துவம் வெறும் கோஷம் இல்லை. நாளைய இந்தியாவை வடிவமைக்க நம் பெண்களே அதிக பங்களிப்பை வழங்குவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்று பேசினார்.
English Summary
Republic Day 2023 President Droupadi Murmu