குடியரசு தின விழா.. கர்நாடக அலங்கார ஊர்திக்கு அனுமதி.!
Republic day celebration Allowed for Karnataka tableau
வரும் ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க கர்நாடகா அலங்கார ஊர்திக்கு
இந்த ஆண்டு குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்கும் மாநிலங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அலங்கார ஊர்தி அமைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் அமைந்துள்ள கண்டோன்மென்ட் பகுதியில் இதற்கான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கேரளா, லடாக், திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 19ஆம் தேதிக்குள் அலங்கார ஊர்திகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். வரும் 23ஆம் தேதி அணி வகுப்பிற்கான ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவின் அணிவகுப்பில் பங்கேற்க கர்நாடக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கர்நாடக அரசின் அலங்கார ஊர்தியை பாதுகாப்பு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Republic day celebration Allowed for Karnataka tableau