பேடிஎம்-க்கு செக் வைத்த ரிசர்வ் வங்கி - இனி பயன்படுத்த முடியாத? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்புழக்கம் பலமடங்கு அதிகரித்துள்ளது. தள்ளுவண்டி கடைகள் முதல் பலரும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் என்று பல வகையான டிஜிட்டல் சேவைகளை கொண்டு பணத்தை செலவிட துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வந்ததால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவின் மூலம் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் பணத்தை போடுவது, கடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, பிரீபெயிட் சேவைகள், வாலெட்டுகள், ஃபாஸ்டேக் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது. வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். 

மேலும், ஃபாஸ்டேக், சேமிப்பு அக்கவுண்ட், நடப்பு அக்கவுண்ட் உள்ளிட்டவைகளில் உள்ள பணத்தை செலவழிக்கலாம். ஆனால், வங்கி சார்பில் பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிமாற்றங்களை அனுமதிக்கக்கூடாது. பயனர்கள் தொடர்ந்து பேடிஎம் யுபிஐ சேவையை பயன்படுத்தலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reserve bank ban paytm


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->