மீண்டும் இணையும் ஜனதா கட்சிகள்! தேசிய அரசியல் களத்தில் இறங்கும் நிதிஷ்குமார்! - Seithipunal
Seithipunal


இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் பிரகடனம் செய்யப்பட்ட அவசர நிலையை எதிர்த்து உருவான கட்சி தான் ஜனதா தளம் கட்சி. தேசிய அளவில் உருவான ஜனதா தள கட்சி பின்னர் பிரிந்து மாநிலக் கட்சிகளாக மாறின. முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் சந்திரசேகர் தலைமையில் சமாஜ்வாதி ஜனதா தொலைக்காட்சியும் உத்தர பிரதேசத்தில் உருவானது. இதேபோன்று அஜித் சிங் தலைமையில் அரசியல் தளம் உருவானது.

பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் தலைமையில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளமும் உருவாகின. இந்த நிலையில் அனைத்து ஜனதா தள கட்சிகளும் மீண்டும் ஒன்றிணைந்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை போட்டியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த முயற்சிகள் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன. இதற்கு முன்னோட்டமாக பீகாரில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளமும் மீண்டும் இணைந்து புதிய கட்சியாக உருவாகும் சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு பீகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்ற நிதீஷ் குமார். அந்த கூட்டணியில் இருந்து விலகி தற்பொழுது லல்லு பிரசாத் யாதவர் உடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறும் நோக்கத்துடன் இரு கட்சிகளையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராஷ்டிய ஜனதா தள கட்சியின் விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூட்டம் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது மேலும் லல்லு பிரசாத் 12-வது முறையாக கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இரு கட்சிகளும் கலைத்து விட்டு புதிய கட்சி மற்றும் சின்னத்தை பெற்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சியின் வரும் இணைந்து களமிறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தனது முதல்வர் பதவியை லல்லுவின் மகன் தேஜஸ்வி யாதவ்விற்கு விட்டுத்தர நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் தேசிய அறிவிப்பு அரசியலில் நேரடியாக களம் இறங்க உள்ளதாக தெரிய வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reuniting Janata parties Nitish Kumar entering again in national politics


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->