திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் ரோப்கார் சேவை அறிமுகம்.!
Rope car service soon Thirupathi elumalaiyan temple
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக சென்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய தினமும் 2.5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இதில் பக்தர்கள் பேருந்து மற்றும் படிக்கட்டு வழியாக மலையேறி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் அமைக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி திருப்பதி மாநகராட்சி கூட்டத்தில் ரோப்கார் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அரசு ரோப் காருக்கான திட்டத்தை தயாரித்து வருகிறது. அந்த வகையில் திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரை ஒரு வழித்தடமும், பேருந்து நிலையத்திலிருந்து அலிபிரிக்கு மற்றொரு வழித்தடத்தில் ரோப்கார் அமைத்து பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
மேலும் பேருந்து நிலையத்தின் அருகில் ஹெலிபேடும் அமைக்கப்படவுள்ளது. ஆரம்ப கட்ட திட்ட பணிகள் முடிந்ததும் விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Rope car service soon Thirupathi elumalaiyan temple