ரூ. 250 கோடி மோசடி! வசமாக சிக்கிய நபர்! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்த வேலையில்லாத நபர் ஒருவர் சுமார் ரூ. 250 கோடி மதிப்புள்ள ஜிஎஸ்டி இ-வே பில்லிங் பரிவர்த்தனைகள் தொடர்பான பெரும் மோசடியில் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.

இதற்கிடையில், அந்த நபரின் வீட்டுக்குச் ஜிஎஸ்டி அதிகாரிகள் நேரில் சென்று அவரது பெயரை பயன்படுத்தி ரூ.250 கோடி மோசடி நடந்துள்ளதை அவரிடம் எடுத்து கூறிய பின்பு தான் அந்த நபருக்கு அந்த விஷயம் தெரிய வந்ததுள்ளது.

இந்நிலையில், அஸ்வினி குமார் என்ற இளைஞருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்சப்பில் வேலைவாய்ப்பு குறித்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இவரும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதில் கேட்கப்பட்ட  மின் கட்டணம், தந்தையின் ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் யாரென்றே முகம் தெரியாத அந்த நபருக்கு அனுப்பி உள்ளார்.

மேலும், இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ரூபாய்.1,750 பணத்தையும் அவர் அனுப்பியுள்ளார். ஆனால் அஸ்வினி குமார் -க்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அவரது தகவல்களை திருடி தவறாக பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கை உருவாக்கி ஒரு பெரிய நிறுவனத்தை தொடங்கி சுமார் ரூ.250 கோடி இ-வே பில்லிங் மோசடி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான இந்த வழக்கை விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்க ஜிஎஸ்டி துறை உள்ளூர் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாக எஸ்.பி. ஆதித்யா பன்சால் தகவல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs. 250 crore fraud A person caught in the grip Police investigation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->