ராஜஸ்தான் : காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானின் பில்வாராவில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள பிரதாப்நகர் பகுதியில் நேற்று அதிகாலை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவளியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது காரிலிருந்து ஏராளமான ரொக்க தொகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று பில்வாரா சிட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர தயாமா தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் காரில் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பணத்தை என்னும் பணியில் ஈடுபட்டதில் கைப்பற்றப்பட்ட பணம் ரூபாய் 5 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்த போலீசார் அவரிடம் இந்த பணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs 5 crore in cash recovered in Rajasthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->