பெங்களூரு: ரூ.65 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்.!
Rs 65 lakhs worth gold seized in bangalore airport
பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரை கைது செய்த அதிகாரிகள், ரூபாய் 65 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பஹ்ரைனில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது சந்தேகத்தின் அடிப்படையில் பயணி ஒருவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், வயிற்றில் மறைத்து பேஸ்ட் வடிவிலான தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த ரூபாய் 65 லட்சம் மதிப்பிலான 1¼ கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பயணியிடம் தங்கம் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Rs 65 lakhs worth gold seized in bangalore airport