நீட் தேர்வு - மாணவிகள் பூ வைக்க கூடாது.!!
Rules and regulations for neet exam
இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து 1.5 லட்சம் மாணவர்களும், நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கின்றனர்.
நாளை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் முழுக்கை சட்டை அணியக்கூடாது, மாணவிகள் தலையில் பூ வைக்கக்கூடாது, தங்க நகை ஆபரணங்கள் அணிந்திருக்கக் கூடாது.
மேலும் மொபைல் போன் எடுத்து செல்லத்தடை, தெளிவாக தெரியும் வகையில் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லலாம். எலெக்ட்ரானிக் சாதனங்கள் எதையும் எடுத்து செல்ல முடியாது. காலணி அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
English Summary
Rules and regulations for neet exam