பதவியேற்பு விழாவை முன்னிட்டு ஒடிஷா கடற்கரையில் மோடி 3.0 மணல் கலை - Seithipunal
Seithipunal


இன்று பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் டெல்லியில் விரைவாக  நடைபெற்று வருகிறது. இதற்காக பல கலைஞர்களும் தங்களது திறமையால் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு ஒடிசாவின் மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பதவியேற்பு விழாவுக்கு முன் ஒடிஷாவின் கடற்கரை மணலில் பிரதமர் மோடி 3.0 என்ற கலைப்படைப்பை செதுக்கி பிரதமர் மோடிக்கு தனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மணலில் பொறிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் இந்த கலைப்படைப்பைப் பார்க்கவும், அதனுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்கவும் மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

இதற்க்கு முன் சுதர்சன் பட்நாயக் பல கவர்ச்சிகரமான மற்றும் பிரபலமான மணல் கலைகளை உருவாக்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பிரதமர் மோடி கூட சுதர்சன் பட்நாயக்கின் மணல் கலையை பாராட்டியுள்ளார். இன்று சுதர்சன் பட்நாயக் மோடி 3.0 மணல் கலையை கடற்கரையில் உருவாக்கியுள்ளார். சுதர்சன் பட்நாயக் இதற்கு முன்பு கூட, பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெற்றது, ராமர் கோவில் திறப்பு விழா உள்ளிட்ட பல சமயங்களில் மணல் கலையை உருவாக்கி பிரதமர் மோடிக்கு அர்ப்பணித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் பதவியேற்க உள்ளார். இதற்கு முன்னதாக பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் டெல்லியில் மும்முரமாக நடந்து வருகிறது. டெல்லியின் பல்வேறு நகரங்களில் மற்றும் பல்வேறு சாலைகளில், குறிப்பாக ராஷ்டிரபதி பவனைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் பிரதமர் மோடியின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா தொடர்பான புகைப்படங்கள் சாலையோரம் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sand art of narendra modi in the beach


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->