பெண்கள் மீது நடந்து நடந்து செல்லும் சாமியார்.. குவியும் கண்டனங்கள்.!
sattisgar samiyar walk on women
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தம்டாரி மாவட்டத்தில் வரிசையாக 300க்கும் அதிகமான பெண்கள் தரையில் படுத்து இருக்க அவர்கள் மீது ஒரு சாமியார் நடந்து செல்கின்ற வினோத வழிபாடு அரங்கேறி இருக்கிறது.
தம்டாரி மாவட்டத்தில் உள்ள அங்கர் மோதி மாதா கோவிலில் கீழே படுத்திருக்கும் பெண்கள் மீது நடந்து செல்லும் இந்த வழிபாடு நடைபெற்றுள்ளது. அப்படி படுத்திருக்கும் பெண்களின் மீது சாமியாரின் பாதம் பட்டு விட்டால் அவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தங்களது கைகளில் எலுமிச்சம் பழம், தேங்காய், பூக்கள் உள்ளிட்டவற்றை ஏந்திய படி 300க்கும் மேற்பட்ட பெண்கள் கீழே படுத்து கிடக்க 400 மீட்டர் தூரத்திற்கு படுத்திருக்கும் அந்த பெண்களின் மீது சாமியார் ஏறி நடந்து செல்கின்ற காட்சியானது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
இது மனிதர்களுக்கு எதிரான குற்றம் என்று பலரும் தற்போது விமர்சித்து வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆங்காங்கே கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
English Summary
sattisgar samiyar walk on women