பெண்களால் இது முடியாதா? மத்திய அரசை சாடிய உச்ச நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


பெண் சக்தியை பற்றி பேசும் நீங்கள் அதை செய்து காட்டுங்கள்.!!

கடலோர காவல் படையில் குறுகியகால ஆணையத்தின் கீழ் பணியாற்றி வரும் பெண் அதிகாரி பிரியங்கா தியாகி என்பவர் நிரந்தர கமிஷன் முறையை அமல்படுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது கேள்விகளை எழுப்பப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் "ஆணாதிக்க மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது. ராணுவமும், கடற்படையும் ஏற்கனவே இந்த கொள்கையை நடைமுறைப்படுத்தி இருக்கும் போது கடலோர காவல் படை மட்டும் ஏன் அமல்படுத்தவில்லை?

பெண்களால் எல்லைகளை பாதுகாக்க முடியும் என்றால் அவர்களால் கடற்கரையும் பாதுகாக்க முடியும். பெண் சக்தியை பற்றி பேசுகிறீர்கள்... அதை இங்கு காட்டுங்கள்... கடலோர காவல் படையில் பெண்களை பார்க்க விரும்பாத நீங்கள் ஏன் இவ்வளவு ஆணா அதிகமாக இருக்கிறீர்கள்?

கடலோர காவல் படை மீது உங்களுக்கு ஏன் இந்த அலட்சிய மனப்பான்மை. கடலோர காவல் படையில் பெண்கள் இருக்க முடியாது என்று சொல்லப்பட்ட காலம் போய்விட்டது. பெண்களால் எல்லைகளைக் காக்க முடிந்தால் பெண்களால் கடற்கரையும் பாதுகாக்க முடியும்" என மத்திய அரசை சாடியுள்ளது உச்சநீதிமன்றம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC chief justice ask Centralgovt regards women empowerment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->