மணிப்பூர் விவகாரம் | மத்திய, மாநில அரசுக்களுக்கு எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், உச்சநீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்று, தலைமை நீதிபதி எச்சரித்துள்ளார்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறியது. 

கடந்த 3 மாதங்களாக இந்த வன்முறை நீடித்து வரும் நிலையில், கடந்த மே மாதம் நடந்த வன்முறையில், கலவரக்காரர்கள் இரு பெண்களை நிர்வாணமாகி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத்தின் காணொளி காட்சிகள் நேற்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி நாடும் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் வழங்கியுள்ளன.

கடந்த 3 மாதமாக இந்த கலவரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, தற்போது கடும் கண்டனத்தையும், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்றும் பேட்டியளித்துள்ளார்.

இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் மிகுந்த வேதனை அளிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், உச்சநீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும், தலைமை நீதிபதி எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SC Condemn to Manipur Incident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->