பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த முதல்வர் - அதிரடி காட்டிய கல்வித்துறை.!
school headmaster suspend for student clean toilet
கர்நாடகா மாநிலத்தில் ஷிவமொக்கா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது.
இதையடுத்து, ஒரு தலித் அமைப்பு எஸ்.சி, எஸ்.டி மற்றும் தலித் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய தேர்வு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு பணம் செலவழிக்க முடியாததால் மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்ததாக பள்ளி முதல்வர், பெற்றோரிடம் கூறியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, இனிமேல் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது என்று பொதுக்கல்வித்துறை துணை இயக்குனர் தெரிவித்தார். கர்நாடகாவில் இந்த மாதத்தில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த மூன்றாவது சம்பவம் இதுவாகும்.
English Summary
school headmaster suspend for student clean toilet