சோகம் - பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி திடீர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியத்தின் முடிவுகள் மே 11 அன்று அறிவிக்கப்பட்டன. இதில், ஹீர் கெதியா என்ற பதினாறு வயது மாணவி முதலிடம் பெற்றார். 

இந்த நிலையில், இந்த சிறுமிக்கு திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இருப்பினும், சிறுமிக்கு இருதயம் மற்றும் சுவாச பிரச்னைகள் ஏற்பட்டதால், உடனே அவர் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது பெற்றோர்கள் சிறுமியின் கண்கள் மற்றும் உடலை தானம் செய்ய முடிவு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student death due to blood bleading in brain at gujarat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->