கால கொடுமை! ரூ.35 ஆயிரம் கடன்! மகளை பண்ணையாரிடம் விற்ற தாய்! பண்ணையார் கொடுமை! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் ரூ.35 ஆயிரம் கடனை அடைக்க சகோதரியின்  11 வயது மகளை விற்று கடனை அடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவின்  தும்கூருநகர் பகுதியை சேர்ந்த சகோதரியின் 11 வயது மகளை விற்று பெண் ஒருவர் தனது கடனை அடைத்ததாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி விடுமுறையை முன்னிட்டு மகளை ஆந்திராவின் ஹிந்தூர்பூர் நகரில் வசித்து வரும் சகோதரி வீட்டிற்கு தாய் அனுப்பி வைத்துள்ளார்.

மீண்டும் மகளை திரும்ப வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக தாய் வந்தபோது அவ்வூர் பண்ணையாரிடம் வாங்கிய தனது ரூ. 35,000 கடனை அடைப்பதற்காக சகோதரி தனது குழந்தைக்கு அவரிடம் விற்றதை தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பண்ணையார் சிறுமியை வீட்டு வேலைகள் செய்ய வைத்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தான் குழந்தையை பணத்துக்காக வாங்கியதாகவும் தனது பணத்தை கொடுத்துவிட்டு குழந்தையை மீட்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறை குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ. 35,000 கடனை அடைக்க சகோதரியின் 11 வயது மகனை விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selling sister 11 year old daughter to pay Rs 35000 debt in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->