பரபரப்பில் அதிமுக - நிர்மலா சீதாராமானுடன் செங்கோட்டையன் மீண்டும் சந்திப்பு.!!
sengottaiyan again visit union minister nirmala seetharaman
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் மீண்டும் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அவரைத் தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார்.
இந்த தனித்த தனி சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் சந்தித்து பேசி உள்ளார். அதாவது, சென்னை சோழா ஓட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
செங்கோட்டையன் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக கூறப்பட்ட சூழலில் சென்னையில் மீண்டும் சந்தித்து பேசி உள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
sengottaiyan again visit union minister nirmala seetharaman