வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்த 7 பேர் கைது.!   - Seithipunal
Seithipunal


வங்காளதேசம் நாட்டில் பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலக கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தபட்டது. இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். 

இதையடுத்து வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அண்டை நாடான வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

அதன் படி, வங்காளதேசத்தின் எல்லையையொட்டி அமைந்துள்ள திரிபுராவில் உரிய ஆவணங்கள் எதுவுமில்லாமல் வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் நுழைந்துள்ளதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது. இதனையடுத்து ரெயில்வே போலீசார் உதவியுடன் அகர்தலா ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். 

அப்போது வங்காளதேசத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு தப்ப முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலாய் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்க முயன்ற 2 இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven bangaladesh peoples arrested in tripura


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->