புத்தாண்டு கொண்டாட்டம் : வெளிமாநிலத்திலிருந்து மதுபானம் கடத்திய ஏழு பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் புத்தாண்டு உள்ளிட்ட பல பண்டிகைகளை சரிவர கொண்டாட முடியாமல் இருந்தது. தற்போது இந்த வருடம் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்ல வழக்கத்தை போல அனைத்து பண்டிகைகளும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், நாளைய தினம் புத்தாண்டு என்பதால் அனைத்து நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் காளைகட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிமாநிலத்திலிருந்து மதுபானங்கள் கடத்தி வருவதாக கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் படி, போலீசார் தலேகாவ் தாபடே மற்றும் நல்லே மேம்பாலம் பகுதியில் வாகனங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் படி, அந்த வழியாக வந்த லாரி ஒன்றை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். 

இந்த சோதனையில் லாரியின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டாயிரம் பார்சல்களில் இருந்த வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட இந்த மதுபானங்களின் மதிப்பு ரூ.1 கோடியே 70 லட்சம் ஆகும். 

மேலும், இந்த மதுபானங்களை கடத்தி வந்த 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், கோவாவில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு மதுபானங்களை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven peoples arrested for liquar kidnape


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->