நர்மதை ஆற்றில் நீராடிய 7 பேர் மாயம்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம், பொய்ச்சா கிராமத்தில் உள்ள நர்மதை ஆற்றில் இன்று மதியம் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஏழு பேர் ஆற்றில் மூழ்கி காணாமல் போனார்கள். 

உடனே அங்கிருந்த உள்ளூர் நீச்சல் வீரர்கள் ஆற்றில் குதித்து காணாமல் போனவர்களை தேட ஆரம்பித்தனர். பின்னர் தீயணைப்பு படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சூரத்தில் இருந்து வந்திருந்த பதினேழு பேர் கொண்ட குழு ஒரு கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு நர்மதை நதியில் புனித நீராடியபோது ஏழு பேர் நீரில் மூழ்கியதாக காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven peoples missing in narmatha river


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->