இந்தியாவில் 75 சதவீத தொழிலாளர்கள் வெப்பத்தினால் பாதிக்கப்படுகின்றனர் - ஆய்வில் தகவல்.! - Seithipunal
Seithipunal


உலகத்தில் மிக அதிக வெப்ப அலைகளைச் சந்திக்கும் நாடுகள் குறித்து சமீபத்தில் உலக வங்கி ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், "இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது தெரியவந்தது. 

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், உலக நாடுகளில் மிக அதிக வெப்ப நிலையைச் சந்திக்கும் நாடாக இந்தியா மாறும் என்று விஞ்ஞானிகள் எச்சரிகை விடுத்துள்ளது. இந்த விபரங்களை "இந்தியாவின் காலநிலை முதலீட்டு வாய்ப்புகள்" என்ற தலைப்பில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இதில், இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களில் கடந்த சில ஆண்டுகளில் பதிவான வெப்பம் குறித்த அனைத்து தகவல்ககளும் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் தலைநகர் டெல்லியின் வெப்ப நிலை 114 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. இதுதான் மிக அதிக வெப்பநிலை ஆகும். 

இதேபோன்று, நாட்டின் பல முக்கிய நகரங்களில் வெப்பத்தின் அளவு சற்று அதிகமாக இருந்தது. கடந்த பல ஆண்டுகளில் வெப்பத்தினால், இந்தியாவில் பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஏற்படும் வெப்பத்தினால், நாட்டின் தொழில் வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் உள்ள தொழிலாளர்களில் 75 சதவீத தொழிலாளர்கள் வெப்பம் சார்ந்த தொழில்களையே செய்து வருகிறார்கள். 

இந்தியாவில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்தால் தொழிலாளர்களின் உழைப்பு பாதிக்கப்படும். இது நாட்டின் தொழில் வளத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seventy five percentage employers affected for heat in india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->